தண்டையார்பேட்டை: ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு வெடித்து காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்
சென்னை ராயபுரம்,வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை,எண்ணூர் திருவொற்றியூர்,உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்து நேற்று முதல் இன்று காலை வரை சுமார் 30 பேர் படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் அவர்களுக்கு தனி வார்டு அமைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.