பழனி: பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பில் நான்கு மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தைச் சார்ந்த மணமக்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பழனி அடுத்த பெத்தநாயக்கன்பட்டி, ஓபுளாபுரம், கொடைக்கானல், திண்டுக்கலை சார்ந்த நான்கு மணமக்களுக்கு பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் திருமணம் நடைபெற்றது.