அரூர்: அரூர் நகராட்சியில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
தருமபுரி மாவட்டம் அரூர் நகராட்சி பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பல மாதங்களாகச் செயல்படவில்லை. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பழுதடைந்த கேமராக்களை உடனடியாகச் சரிசெய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நகராட்சி மற்றும் காவல்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.