ஸ்ரீரங்கம்: சோமரசம்பேட்டையில் சித்த மருத்துவ கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது
திருச்சி சோமரசம்பேட்டையில் 30 லட்சம் மதிப்பீட்டில் சித்த மருத்துவ கட்டிடத்திற்கான பூமி பூஜை இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு பங்கேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்