கோவை வடக்கு: கோவை தடாகத்தில் அட்டகாசம்: 1,000 வாழைகளை அழித்த 'வேட்டையன்' யானை!
கோவை தடாகம் மாங்கரை பகுதியில் 'வேட்டையன்' காட்டு யானை கடந்த ஒரு வாரத்தில் 1,000 வாழைகளை தின்று சேதப்படுத்தியுள்ளது. பயிர் சேதத்திற்கு வனத்துறை இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என விவசாயி மணி வேதனை தெரிவித்துள்ளார்.