விருத்தாசலம்: கீரம்பூர் கிராம பேருந்து நிறுத்தம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியல்
கடலூர், விருதாச்சலம் அருகே கீரம்பூர் கிராமத்தில் கடலூர் விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் 2 கிலோமீட்டர் தூரமுள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் கிராம மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.