விருத்தாசலம்: விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் வாடகை பாக்கி செலுத்தாத 3 கடைகளுக்கு 'சீல்'
விருத்தாசலத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. இங்குள்ள கடைகள் நகராட்சி மூலம் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு, வாடகை பாக்கி செலுத்தக்கோரி பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தும், அவர்கள் கட்ட முன்வரவில்லை. இந்நிலையில் இன்று காலை வாடகை பாக்கியை முறையாக செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.