சத்தியமங்கலம்: ஆசனூர் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது
ஈரோடு மாவட்டம் ஆசனூரில் தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இன்று காலை சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.