நிலக்கோட்டை: அய்யம்பாளையம் அருகே மருமகனை கொலை செய்த மாமனார் - உண்மை கொலையாளிகளை கைது செய்யக்கோரி, உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்
அய்யம்பாளையம் அருகே காதலித்து திருமணம் செய்த மருமகனை கொலை செய்த மாமனார். மாமனார் சந்திரன் ஒருவரால் மட்டும் ராமச்சந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்க முடியாது? இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்? எனவே, உண்மை கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறி, கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் உறவினர்கள் ராமநாயக்கன்பட்டியில் ஆண்டிபட்டி - வத்தலகுண்டு சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.