சாத்தான்குளம்: புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. 10-ம் நாள் திருவிழாவில் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகமும், பக்தர்கள் மஞ்சள் நீராடுதலும் நடந்தது. இதில் சிறப்பு பூஜையையடுத்து பக்தர்கள் மஞ்சள் நீராடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.