இராமநாதபுரம்: ஸ்ரீ கோதண்டராமர் ஆலயத்தில் ஆணி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழா- தேரை வடம் பிடித்த பக்தர்கள்
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சைவ வைணவ எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்ரீ கோதண்ட ராமர் ஆலயத்தின் ஆணி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழா கடந்து 29ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இன்று காலை கோதண்ட ராமர் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், ஒயிலாட்டத்துடன் தேரோட்டம் ஆலயத்திலிருந்து பொதுமக்கள் பக்தர்கள் ஆன்மீக பெரியோர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.