செங்கம்: மேல் செங்கம் பேருந்து நிலையம் இருளில் மூழ்கியது: 12 கிராம மக்கள் கடும் அவதி
திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் பேருந்து நிலையத்தில் உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களாக பழுதாகி உள்ளது. இதனால் 12 கிராம மக்கள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.