பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் நவராத்திரி விழா நிறைவு: மகிஷாசுர வதம் கண்டு பக்தர்கள் பரவசம்!
பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெற்ற நவராத்திரி விழா மற்றும் 45-ஆம் ஆண்டு இலட்சார்ச்சனை விழா நேற்று நிறைவடைந்தது. அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்து, மகிஷாசுர வதம் செய்யும் நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.