கோவை வடக்கு: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு
ஆசிய போட்டியில் தங்கம் வென்று கோவை திரும்பிய வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்தது குறித்து அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.