விருத்தாசலம்: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி நீதியரசர்கள் முன்னிலையில் பெண் வழக்கறிஞர்களுக்கு கோல போட்டி நடந்தது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பெண் வழக்கறிஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் அமர்வு நீதிபதி பிரபா சந்திரன், சார்பு நீதிபதி கௌதமன் கூடுதல் சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுரேஷ், குற்றவியல் துறை நீதிபதி தாரணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு பெண் வழக்கறிஞர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.