கோவை வடக்கு: கோவையில் இன்று கனமழை: வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது
கோவையில் இன்று மதிய வேளையில் பெய்த கனமழையால் மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.