திருப்பத்தூர்: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக என ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓய்வுபெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 29 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிஐடியு நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.