திருப்பத்தூர்: 2026சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் மொட்டை அடித்த இருணாப்பட்டு திமுக கிளை செயலாளர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
இருணாபட்டு பகுதியை சேர்ந்த நவநீத மகன் குமார் இவர் கூலி வேலை செய்து வருகிறார் . மேலும் இருணாபட்டுப் பகுதியில் கிளைச் செயலாளராகவும் உள்ளார். இந்த நிலையில் அவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் வருகின்ற 2026 ஆம் ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஸ்டாலினே தமிழக முதல்வராக வரவேண்டும் அதற்காக எனது முடியை காணிக்கையாக்குகிறேன் எனக்கூறி மொட்டை அடித்து சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவு செய்துள்ளார்.