கோவை வடக்கு: கோவையில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் அதிரடி நடவடிக்கை!
கோவையில் பெய்த கனமழையால் தடாகம் சாலை, சோமனூர் பகுதியில் உள்ள VKV அவென்யூ வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வடிகால் வசதி இல்லாததால் மக்கள் சிரமப்பட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார். இதற்கு சிறுவர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.