சத்தியமங்கலம்: ஆசனூர் சாலையில் கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை: போக்குவரத்து பாதிப்பு
சத்தியமங்கலம் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை கரும்பு லாரியை வழிமறித்து கரும்புகளைத் தின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் குறுக்கே நின்ற யானையால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.