பாளையங்கோட்டை: நெல்லை: பயிர்க்கடன் தள்ளுபடி கோரி சாலை மறியல் - 50-க்கும் மேற்பட்டோர் கைது
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.