பாலக்கோடு: பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.60 வரை விற்பனை!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் வறட்சி காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால், தக்காளி விலை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை உயர்ந்துள்ளது. பண்டிகைகள் நெருங்குவதால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.