பழனி: கீரனூரில் காவலர் தூக்கிட்டு தற்கொலை- குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் அசன் முகமது ( 33). கோயம்புத்தூரில் உள்ள ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அசன் முகமது கீரனூரில் உள்ள தனது வீட்டிற்கு விடுமுறையில் வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தனது தாய்க்கும் அசன் முகமது க்கும் இடையே கருத்து வேறுபாட்டால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து அசன் முகமது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.