பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான தொகுதிகளை விட அதிக அளவில் தொகுதிகளை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் பாஜகவை சேர்ந்தவர்கள் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்