ஆம்பூர்: பாட்டூர் மற்றும் ரெட்டிதோப்பு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்ட MLA
ஆம்பூர் அடுத்த பாட்டூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ரெட்டித்தோப்பு பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலந்து கொண்டு இன்று நண்பகல் ஆய்வு மேற்கொண்டார்.இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.