பழனி: பாப்பம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமரன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி அருகே பாப்பம்பட்டி பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பாப்பம்பட்டியை சேர்ந்த முருகவேல் மகன் மருதராஜ்(26) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.