பழனி: பொதுமக்கள் சாலை மறியலின் போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பழனி அருகே பரபரப்பு
பழனி அருகே அழகாபுரி 6 வது வார்டில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்ட ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். சமூதாய கூடம் கட்டுவதாக கூறி ஊராட்சி சார்பில் குடியிருக்கும் வீடுகளை அகற்ற வந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சக்திவேல் என்றவர் மண்ணெண்ணெய் கேனை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது