கோவில்பட்டி: காந்தி மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம் எல் சி விஜய் சிங், கலந்துகொண்டு காங்கிரஸ் தொண்டர்களிடம் மாவட்ட தலைவர் தேர்வு சம்பந்தமாக உரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நகரச் செயலாளர் அருண் பாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.