ஆம்பூர்: சான்றோர்குப்பம் பகுதியில் உரிய மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது
ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் கல்லூரி மாணவனுக்கு உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்த நிலையில் கல்லூரி மாணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திருப்பத்தூர் எஸ்பி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் பேரில் இன்று பிற்பகல் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த அவரை கைது செய்து கிளீனிக்கிற்கு சீல் வைத்தனர்.