பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதைகளில் நீதிமன்ற உத்தரவுப்படி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ரோப் கார் வின்ச் ஸ்டேஷன் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக சென்று வர கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களுக்கு கூட்ட நெரிசலில் உடல் நலக்குறைவு ஏற்படும்போது கோவில் நிர்வாகம் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது.