தண்டையார்பேட்டை: காசிமேட்டில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் குறைந்த மீன்களே வந்தால் சஷ்டி விரதம் கடைபிடிப்பதால் அசைவ பிரியர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
காசிமேடு மீன்பிடி ஏல கூடத்தில் காற்றழுத்து தாழ்வு பகுதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க யாரும் செல்லாததால் ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களும் கரை திரும்ப மீன்வளத்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது மேலும் நாடு முழுவதும் சஷ்டி விரதத்தின் ஐந்தாவது நாளான இன்று கடைபிடிக்கப்படுவதால் அசைவ பிரியர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.