கோவில்பட்டி: புது ரோடு பகுதியில் அதிமுக 54 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்
கோவில்பட்டி நகர அதிமுக சார்பாக அதிமுக கட்சி 54ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுரோட்டில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் உருவச்சிலைக்கு கோவில்பட்டி நகரச்செயலாளர் விஜயபாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர். இதில், அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.