திருப்பத்தூர்: வெங்களாபரம் பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியை கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி-இறந்து விட்டார் என்று நினைத்து உறவினர்கள் கதரியதால் பரபரப்பு
அனேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் பிரியதர்ஷினி திருமணம் ஆகாத நிலையில் வெங்களாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் காலையில் வீட்டில் இருந்தே வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் ஆள் வராமல் இருந்து உள்ளார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் கிணற்றில் யாரோ பெண் விழுந்து இறந்து கிடக்கிறார் என்று அக்கம் பக்கத்தினர் அலறி உள்ளனர். தீயணைப்புத் துறையினருக்கு தகவலின் பெயரில் விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு குழுவினர் பெண் உடலை மீட்கும் பொழுது அவர் உயிருடன் இருக்கிறார் என்று அறிந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்