திருப்பத்தூர்: சதுரங்க வேட்டை பட பாணியில் 1 போட்டா 2 ஆசை வார்த்தை கூறி ஆன்லைனில் வலைவிரித்து 69 லட்சங்களை சுருட்டிய ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த தாய், மகன் கைது
ஆம்பூர் அடுத்த ஐயனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலூர் கலால் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவரது மகன் நித்திஷ் என்பவர் பட்ட படிப்பு முடித்து விட்டு பணம் சம்பாதிப்பது எப்படி என்று சமூக வலைத்தளத்தில் கற்று கொண்டு உடன் படித்த நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் நட்பாக பழகி இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் பரிமாறி கொண்டு கிரிப்டோ கரன்சி, ஷேர் மார்க்கெட் என்று பல விதமான பெயர்களை பயன்படுத்தி 1 போட்டா 2 கிடைக்கும் பணத்தை என்னிடம் முதலீடு செய்யுங்கள் என்று பலரிடம் ஆசை வார்த்தை 69 லட்சம் ஏமாற்றியதால் புகாரின் பேரில் நித்திஷ் குமார் மற்றும் அவருடைய தாய் ஆகிய இருவர் கைது