திருப்பத்தூர்: பாவுசா நகரில் சொத்துக்காக தாயை சுத்தியால் தலையில் தாக்கி கொலை செய்த மகன் கைது
கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி இவருக்கு வெற்றிச்செல்வன் மற்றும் கோமதி என்ற பிள்ளைகள் உள்ளன. ஆதிமூலத்துகு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது.அந்த வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கி தர வேண்டும் என தகராறில் ஈடுபட்டு தாயார் வெங்கடேஸ்வரியை மகன் வெற்றிச்செல்வன் கொலை செய்துவிட்டு சென்னைக்கு தப்பி சென்றார்.தனிப்படை போலீசார் சென்னையில் வெற்றி செல்வனை கைது செய்தனர்.