திருப்பத்தூர்: ஹவுசிங் போர்டு பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு துறை
திருப்பத்தூர் நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி இவரது வீட்டிற்குள் இன்று 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நுழைந்து வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி வருவதாக பூபதி திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் தசரதன் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை பாதுகாப்பாக மீட்டனர்