திருப்பத்தூர்: காக்கனாம்பாளையம் பகுதியில் பெங்களூருக்கு கடத்த இருந்த 50 லட்சம் மதிப்பிலான 820 கிலோ செம்மரக்கட்டைகள் மற்றும் 3கார் உட்பட 2 இருசக்கர வாகனம் பறிமுதல்
கொடும்மாம்பள்ளி பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் ஆந்திராவிலிருந்து செம்மரம் கடத்தி வந்து காக்கனா பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய பம்பு செட்டில் 820 கிலோ அடங்கிய 50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தார். இங்கிருந்து செம்மரக்கட்டைகளை பெங்களூருக்கு கடத்த இருந்த இதுகுறித்து திருப்பத்தூர் வனச்சரகர் சோழராஜனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் 820 கிலோ செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது இதனால் சேகர் என்பவரை கைது செய்தனர் மேலும் 3கார் 2இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.