சிங்கம்புனரி: சிங்கம்புணரி: மயானத்திற்கு செல்ல வழி இல்லை - கயிறு கட்டி உடல்களை சுமந்து செல்லும் அவலம்
சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் கிராமத்தில் மயானத்திற்குச் செல்ல பாலம் இல்லாததால், மழைக்காலங்களில் மக்கள் கயிறு கட்டி ஆற்றில் இறங்கி உடல்களைக் கொண்டு செல்லும் அவலநிலை நீடிக்கிறது. பாலம் கட்டித் தரக் கோரி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.