தருமபுரி: பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு: ரூ.59 ஆயிரம் பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.59 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஊழியர் ஒருவரின் ஜி-பே கணக்கில் இருந்த ரூ.1.33 லட்சம் பரிவர்த்தனை குறித்தும் தீவிர விசாரணை நடைபெறுகிறது.