தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 தூய்மை வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சேர்மன் கருணாநிதி மற்றும் டீன் பாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.