சீர்காழியில் தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 28 ஆவது திவ்ய தேசமான இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று உத்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவிக்ரம நாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா,கோவிந்தா என பக்தி முழக்கங்கள் எழுப்பிய படி சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் மூலவர் தாடாளன் பெருமாளின் வலது பாதத்தையும் வலது பாதம் அருகே உள்ள ஒரு அடி உயர தவிட்டு த