கோவில்பட்டி: மதுரை திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் விடுதியில் டாஸ் திரைப்பட பூஜை எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கோவில்பட்டியில் மதுரை திருநெல்வேலி சாலையில் உள்ள தனியார் விடுதியில் பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் டாஸ் என்னும் திரைப்படம் துவக்க விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பட பூஜையை துவக்கி வைத்தார். நடிகர் ரத்தன் மௌலி மற்றும் யாசிகா ஆனந்த் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இயக்குனர் சகு பாண்டியன் செய்திருந்தார்.