தேனி: காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
Theni, Theni | Oct 3, 2026 காந்தி ஜெயந்தியன்று அரசு விடுமுறையை கடைபிடிக்காத 37 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தேனி தொழிலாளர் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் 44 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.