மயிலாடுதுறை: மயூரநாதர் ஆலயத்தில் உள்ள குமரக்கட்டளை சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெற்றது.
கந்த சஷ்டி விழா 22ம் தேதி துவங்கி 27 தேதி வரை நடைபெற்று வருகிறது இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரகட்டளை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஐந்தாம் நாளான இன்று வெள்ளி ரிஷப  வாகனத்தில் வள்ளி தேவசேனாவுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அவருக்கு 16 வகையான சோடச தீபாராதன