திருப்பத்தூர்: கதிரம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மோதி விபத்து! கட்டைவிரலை பிளாஸ்டிக் கவரில் எடுத்து வந்ததால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மோட்டூர் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் மோகன் இவர் கதிரம்பட்டியில் உள்ள தனது உறவினர்களை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் கதிரம்பட்டி சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தார் அப்போது கதிரம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜுவ் மகன் அண்ணாமலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போதே எதிர்பாராத விதமாக நேர் எதிரே மோதி கொண்டதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். இதில் மோகனுக்கு வலது காலில் காயம் அடைந்து கட்ட விரல் துண்டானது.