கோவை வடக்கு: பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா - ஆதீனங்கள் வலியுறுத்தல்
பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் புலவர் கா.ச.அப்பாவு எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டன. தாய்மொழி வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என பேரூர் மற்றும் சிரவை ஆதீனங்கள் வலியுறுத்தினர். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.