பெரம்பலூர்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு, தீபாவளி போனஸ் மற்றும் நிலுவை கூலி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு (CITU) சார்பாக சுமை பணி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.