போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 24 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து 373 கிராம் மெத்தாம்பெட்டமைன், 48 எம்டிஎம்ஏ மாத்திரைகள் (30 கிராம்) மற்றும் 2.8 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது மேலும் போதைப்பொருட்களைக் கடத்தும் கும்பல்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பி விவேகானந்தா சுக்லா தெரிவித்துள்ளார்.