உடையார்பாளையம்: பிச்சனூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற டிப்ளமோ மெக்கானிக் என்ஜினியர், டிராக்டர் மோதி பலி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சத்திரம் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் வயது 23. டிப்ளமோ மெக்கானிக் என்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் வேலையில் இருந்தவர், தற்போது உள்ளூரில் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து பூச்செடி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் மண் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் செந்தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.