தருமபுரி: ஸ்போர்ட்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து - மூன்றடுக்கு கட்டிடம் தீயில் கருகியது
தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் உள்ள ஜான்சன் & ஜான்சன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.